[one_half]பாய் மரங்கள்
எனதுடல் கடக்க
சிறு எண்ணம் ஒரு பறவையின் ஒலி
நகர்ந்தால் ஓரிடம் இருந்தால் பல இடம்
பரோபகாரி பசியில் இருக்க
தத்துவம் உயிர் கடைகிறது
நான் அந்த பெரும் சொல்லா
மூங்கில் புதர் அருகே பாம்பின் வாக்கியமா
நதிப் படுகையின் மழைக்காலப் பாடலா
சிறகு உற்ற புள்ளின் உச்சிவானம்
அதுவும் நானும் இன்னும் பூமி சேரவில்லை
இருந்தும் என்னை
வெளியே வெளியே அழைப்பது யார்
அனைத்தின் உள்ளேயும் என்ன நடக்கிறது
நேற்றைச் சுமந்தேன் அலைகிறது இன்று
உடலின் மொழியறியா பாய்மரங்கள் ஏன்
இவ்வளவு வேகமாக கடந்து செல்கிறது.[/one_half]
[one_half_last][/one_half_last]