[one_half]தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டுமென
நான் சொல்ல முடியுமா
தனக்குத் தெரிந்ததை செய்ய
ஒருவர் முடிவெடுத்திருக்கும்போது
எல்லா விளைவுகளையும் எதிர்நோக்கி
இயங்கும்போது
முதலில் சொன்னவர் பேச்சைக் கேட்க
வேண்டியதில்லை எனவும் அதிலும் தானும்
விலகும்போது
இப்படிதான் நான் சொன்னதை
முதலிலேயே கேட்டிருக்க வேண்டும் எனத்தான்
யாவும் முடிகிறது
மழை குறித்து விவசாயி சொல்வதும்
நிலை குறித்து ஞானிகள் பகிர்வதும்
கலை குறித்து கவிஞன் பிராலாபிப்பதும்
இலை குறித்து மரங்கள் புலம்புவதும்
தானாய்தான் இருக்கிறது நானல்ல [/one_half]
[one_half_last] [/one_half_last]