[one_half]மனக்குகை என்பது ஆதியில் மிருகம்
கொஞ்சம் தாயாகும் பகை
இறைச்சியும் எலும்புத் துண்டுகளும்
மனம் விரும்பியது பகட்டின் ஒளி
மொழியை குகைக்குள் விட்டு
மனம் அலைந்த வெளி மனிதம்
மனக்குகையில் ஒலி
அடங்கா சப்தம்
அண்ட சராசரமும் நாதமும் ஒடுங்க
அலறும் குகைவாசலை யார் மூடுவது
பின்னும் மனக்குகையில்
ஒலி வரைந்த ஓவியங்களை
யார் பார்ப்பது, எதில் சேர்ப்பது
அதில் நீக்குவதும் யார்[/one_half]
[one_half_last][/one_half_last]