[one_half]எனக்கு சில கதாபாத்திரங்கள் போதும்
நீண்ட கதையைச் சொல்லும்
ஆவேசமும் எனக்கில்லை
ஞானிகள் கடந்துபோன காலங்களைப்பற்றி
இறுதி முடிவெடுக்க நான் யார் ?
கையடக்க தொடர்பு சாதனத்தால்
இன்றளவில் இயக்கப் படுகிறேன்
எல்லாருக்கும் அதிகாலையில்
இட்லிகள் வேண்டுமாயிருக்கிறது
சிலருக்கு சப்பாத்திகள்
பலருக்கு பிரட் வித் பழக்கூழ்
இப்பொழுதெல்லாம் யவனிகாவிற்கு
போன் செய்தால் குடும்பக் கவலைகளை
பெருக்குகிறார்
பெண் கவிஞர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்
கைலாஷ் சிவனுக்கு கைபேசி தொலைந்து போனது
இப்படியாகத்தான் என் குடும்பம்
எளிமையாகிவிட்டது
எனது இலக்கியக் கவலை குறித்து
எனது பணிமையம் ஒரு மயிரளவும்
அக்கறைப் படுவதில்லை.
என்னைக் கவிஞனா புரவலனா
எனச் சந்தேகிக்கும் அவனுக்குள்
ஒருமுறைதான் பலியாக்கப்படுவேன்
மறுமுறை என் அனைத்து கதாபாத்திரங்களையும்
எனது மொழியின் நட்பின் பொருட்டு
சோம்பலாக கைவிடவும் முடியும்
இது ஒரு வாழ்நாளின் மிக குறுகிய கதை.
[/one_half]
[one_half_last][/one_half_last]