[one_half]வசனங்கள் ஏதும்
என் வழி நடக்கில்லாத சமயம்
உள்ளே நிறுத்தி
யார் நீ எனக்கேட்கும் ஓலம்
உட்பிரகாரமெங்கும் மேனியதிர எதிரொலிக்கிறது
முன்பொருவன் சொன்ன பதில்
இன்னும் ஒருவனும் அதைச்சொல்லி நிற்பான்
அக்கணம் சிறுபொட்டுத் தவளையொன்று
யாளியின் நாவின் மேல் தத்தி ஏறுகிறது
மத்தகங்கள் அசைந்து கீழ்யானை
பிளிறும் ஓசையில்
சிற்பங்கள் ஒரு கணம் கண் திறந்து
பின் மெல்ல மூடிக்கொள்கின்றன
என்ன சகுனம் இது
எத்தனை பிறவி கண்ட அகமும் காலடிகளும்
தாமரைகள் குளத்தில் ததும்பி அசைகின்றன
அதன் பாசத்தினடியில் மீனின் மூலக்கருவா நான்
விதானங்களில் வௌவால்கள் தலைகீழாய் தொங்குகின்றன
ஒரு கணம் கண்திறந்து பார்த்தேன்
சிறு தெய்வங்களோடு தேவகணங்கள்
கற்பிரகாரத்தில் ஓடிவிளையாட
அமர்ந்த நிலையில் துதிக்கை நீட்டி வில்வப்பழங்கள்
பொறுக்குகிறது விக்கினமற்ற மத்தகம்
கானகத்தில் வழிவிடுமாறு முன்பொருவன்
சொன்னதை அக்களபமிடை
நானும் இறைஞ்சினேன்
‘க்ளக்’ என யாளியின் தாடை அசைந்து மூடியது[/one_half]
[one_half_last][/one_half_last]