[one_half]மனோகரம் என்று ஒரு வார்த்தை
பிறகு மனோரம்மியம் மனோரஞ்சிதம்
மனோரதியம், மனோவசியம், மனோன்மணியம்
எனத்தொடர்ந்து எனக்குள்
ஒரு மனோபாவமே இழையோடுகிறது
அது ஒரு மோகினி ஆட்டத்தின்
மார்கழி மாத செண்டையும் தாளமும்
கொண்டு வரும் காலவெளி
ஆழிக்கும் மேடுவிற்க்கும்
நதிக்கும் வனத்திற்க்குமிடையே
மோகினி அர்த்த சாம ஓடையில்
நீராடுகிறாள்
கீழ் வானில் வெள்ளி முளைத்து
முழுநிழவு அவள்மேல் சிந்துகிறது
நீரலைகள் சலம்புகின்றன
புதர்களுக்குள் ஓநாய்களின் கண்கள் ஒளிர்ந்து
மறைகின்றன
அவளைச் சூலுறச் செய்யும்
பனிக்காற்று தென்மேற்க்கில் ஊளையிடுகிறது
காரிருளில் மனோகரம் ததும்ப அவள் பாடுகிறாள்
அதன் மனேவசியத்தில்
அல்லது அதன் ரம்மியத்தில்
அல்லது அதன் ரஞ்சிதத்தில்
வசியமாகிறது எனது மனோபாவம்
மனோரதியம் என்ற வார்த்தை
ஒரு பெண்ணா[/one_half][one_half_last] [/one_half_last]