[one_half]நீலத் திமிங்கிலங்கள் வாழும் கடலில்
அதன் பெரும் மூச்சு
எழும்பும் மஞ்சள் நிலவின் மீது
நீருற்றினைப் பாய்ச்சுகிறது
மணல் எண்ணி முடிக்க அமர்ந்தவன்
நட்சத்திரங்களை கைவிட்டு
கண்மூடுகிறான்
ராட்சசம் பொங்க
சாய்ந்தாடும் மேகங்கள்
தொடு விளிம்பில் வளைந்து பந்தாகிச் சுழல
அந்தக் கடல் கோளத்தினுள் இழுக்கப்பட்டவன்
வானம் கண்டு மிதக்கிறான்
சிறு சப்தத்துடன் அந்தரத்தின் பாழ்வெளியில்
கொட்டுகிறது
எண்ணிய மணல்துகள்களும்
மதி வடித்த நீர்த்துளிகளும்.[/one_half][one_half_last][/one_half_last]