[one_half]
மைதாஸ் தொட்ட தாவரங்களை நான் பார்த்தேன்
முன் மாலையின் கிரணங்கள்
தங்கத்தாதின் ஏரிப்பரப்பு
அசையும் சருகுகளும் பொன் நிறம்
கடந்த பத்தாண்டு காலம்
இந்த நீர் நிலம் அதன் மௌனம் விகசிக்கும் மயக்கம்
கரைமோதி அலைகள் சப்திக்கின்றன
உழவுக்காளைகள் கூடவே மேய்ந்த பால் எருமைகள்
மீன்பிடித் தெப்பங்கள்
மிக அருவமாக பொருந்தாத வகையில்
எனது நினைவின் அறுபட்ட குரலோடு
பிறகும் ஒரு பத்தாண்டுகள்
சூரியன் நாடும் இந்நிலம் கடந்து இருள் மூடும்
ஜால ஓலங்களினின்றும்
நான் திரும்பும் நகரம்
அதன் வயதில் பாதிப்பொன் செலவழிந்து போனது
மெல்ல நான் இருமுகிறேன்
[/one_half]
[one_half_last][/one_half_last]