[one_half]பிம்பங்கள் கடந்துபோகும்
கோடைக்காலத்தில்
கண் மறைத்துப் போகிறது
நீயற்ற நிகழ்காலம்
ஒரு அருகாமையின் துயரம்
என் நினைவின் ஒரு நாளை
மலரில் அல்லது வீட்டில்
அடைத்து வைத்த சிறு கிளிகளின்
தொடர்ந்த கிறீச்சிடலில் என்னை
நிதானமிழக்கச் செய்யும்போது
உனது நடமாட்டத்தை
என் கடவுள்தான் அறிவார்
அல்லது நீ வருவாய் என்றிருந்த
இறந்தகாலத்தை என் பால்யத்திடம்
ஒப்படைப்பது எனது கோபத்தை ஊடலாக்கலாம்
உன் வதனங்களை ஒத்த நிலக்காட்சிகளை
பயணத்திற்கிடையே உள்வாங்கிப் போகிறேன்
நீ என் அருகில் இருக்கும்போதுதான்
ஒருமுறை பார்த்தேன்
உனக்கடுத்து உம் பிப்பமும் அருகே அமர்ந்திருப்பதை
அதன் புன்னகையில் நீ இல்லை தோழி
அதைச் சந்தித்தவன் நானுமில்லை
இப்படித்தான் நமது காதலின் கோடைக்காலம்
பிம்பங்களாகிவருகிறது.[/one_half]
[one_half_last] [/one_half_last]