[one_half]தொலைக்காட்சியில் இருந்து
நெடுஞ்சாலைக்கு
பிறகு ஒரு நண்பனைக் காண
நேற்று நாளை இன்று
பயணத்திற்கான சாலைகளை
என் வாழ்வில் விதித்தது யார்
பூங்காவின் வெளிச் சுவற்றோரம் ஒரு கிழவன்
வெகுநாட்களாக வாகனங்களை
திசைமாற்றும் ஒரு ஊழியர் மற்றும்
நான் தேடியலையும் புத்தகம்
இன்றைக்கேனும் பேசிமுடித்துவிட வேண்டும்
எனக்கு காய்கறிகள் விலை தெரியாது
ஒரு பழைய ஆபரணம்
அதன் சமகால மதிப்பிலும் அதிக விலையுள்ளது
அதன் தொன்மைக்காக
சில கதைகளை உருவாக்கத்தான் வேண்டும்
தொலைக்காட்சியும் நெடுஞ்சாலையும்
இடம் மாறி அமர்ந்துவிடும் இடம் ஒருவேளை
உனது அருகாமையாக இருக்கலாம்
இருப்பினும் என்னை முத்தமிட்டுவிடாதே
எனக்கு காதலின் விலை தெரியாது.[/one_half]
[one_half_last][/one_half_last]