[one_half]வெற்றுப் படகை விரட்டி
தலை மூழ்கும் நீரில் இறங்க முடியாது
நான் கால் நனையக்கூடாது
படகில் பயணிப்பதுதான் முதலில் எடுத்த முடிவு
காதலை விரட்டிச் செல்வது
காமத்தில் மூழ்குவதெனில்
முதலில் எடுத்த முடிவு
தவறவிட்ட படகிற்காக
காத்திருப்பது அல்ல
நாம் காற்றுகள் பற்றிப் பேசும்போது
படகு கரை சேரும்
என்ற தத்துவம் சொல்வது
காமத்தில் வேண்டுமானால்
இறுதி முடிவாய் இருக்கலாம்
வெற்று படகு நீரில்
இசைவாய் அசைகையில்
காதலுக்காக நீச்சலடிப்பது
துரதிர்ஷ்டவசமானது
எப்போதும்
படகென்றால் நீரில் பயணிப்பது மட்டும்தான்.[/one_half]
[one_half_last][/one_half_last]