[one_half]தருணங்களை உனக்கும்
பரிசளிப்புகளை உன் அருகாமைக்கும்
தீர்மானித்துவிட்ட பின்பு
எனது காலை உணவை மனக்கிளி
கொத்திக்கொண்டு பறக்கிறது
வேடன் விரித்த வலையென நகரம்
பதுங்கிக் கிடக்க
நான் உனது முத்தத்தின் மீது
ஒரு பாடலை புனைந்து கொண்டிருக்கிறேன்
நீ ஒரு தற்செயலான ஆரம்பத்தின் முனையில்
நின்று என் பெயரை
அர்த்த ராத்திரிகளிலும் புலம்பித் திரிகிறாய்
நானோ உன் கண்ணீர்த் திவலை
ஒரு மாபெரும் உதைபந்தாய் மாறி
என் தலைமீது மோதுவதைக் கனவு காண்கிறேன்
மறுபடியும் புன்னகையின்கீழ்
நமது கூடல் ஒரு இரவைத் தாலாட்டும்போது
உன் கண்ணீரைப் பாடலாக்கி நான் தரும்
முத்தத்தின் அவஸ்தையை
இனிமேலாவது அர்த்த ராத்திரிகளில் புலம்பாமல்
இருப்பாயோ அன்பே
பரிசளிக்கும் தருணங்கள் கடந்து கொண்டிருக்கின்றன.
[/one_half]
[one_half_last][/one_half_last]