[one_half]உன் வருகை நிகழும் நாட்களை
என் இரவை நீ விசாரிக்கும்
சம்பவம் இவையன்றி
தவிக்குமென் சுவாசம்
நேற்றின் நகரில்
பெருங்காற்றாய் விசிறியடித்தது
சமைத்த உணவின் முன் நெடு நினைவாய்
வெறித்திருந்தேன்
ஏதும் சொல்லியனுப்பினாயா?
அல்லது வந்தடையாத செய்திகளை
விபரீதமாய்ப் பெருக்கும்
நம் முன்னாட்களின் இதயம்
போதும் போதுமென்றிருக்கிறது
ஒரு நகரத்தின் பரபரப்பும்
அதன் மாலைச் செய்திகளும்
ஒருபோதும் பூத்துக் காணாத
வாசல் தொட்டியில்
குறுமலர்கள் அடர் மஞ்சளில்
தலையாட்டிப் புன்னகைக்கின்றன[/one_half][one_half_last][/one_half_last]