[one_half]மின்மினிகள் சொன்ன கதையில்
நீ உறங்காத இரவொன்றை
தூதனுப்பி என் விடியலை ஊரறிய
பகிரங்கப்படுத்துவது என்ன நியாயம் சகியே
காலத்தின் இடையில் என் கைகள்
ஒரு பூங்கொடியாய் உன் மேனி தழுவி
அதன் நுனியில் இட்ட முத்தம் பூவாய் மலர
யார் சொல்லித் தந்தார்கள் நமக்கு
பிரிவென்றால் நகக்குறியும் இளம் புன்னகையும்
போதும் இந்த வெப்ப மண்டலத்து வேதனைகள்
ஊரெங்கும் மழைபெய்து
பச்சைகள் அடர்ந்து பசுங்கன்றுகள்
புல்மேயும் பொன் மாலையில்
உனது பாடலை அதன் அர்த்தங்களோடு
உறவுபடுத்தி துயரமான இரவுகளைப் பால்கனியில்
பிழிந்து காயப்போட்டிருந்தேன்
காலையில் அதைக் காணவில்லை
மோகம் தூக்கிப் போனதோ.[/one_half]
[one_half_last][/one_half_last]