[one_half]பருவத்திலிருந்து விலகியது நதிக்கரைகள்
கடலைப் பார்வையிடுவது
கர்ப்பத்திலிருக்கும் கண்கள்
எல்லாப் புகைப்படங்களும்
மனித உடலுக்குப் பின்னால்
கடலை உறையவைக்கும்போது
காலத்திலிருந்து பிரிந்துபோவது
யாத்ரீக தர்மமாகிறது
மீண்டும் பருவத்தின் வாசலுக்கு
உணவின் கூடுதூக்கிச் செல்கிறது
ஒரு உஞ்சவிருத்தி
அது பல் துலக்காதது
ஈரத்துணிகளை உலர்த்துவது
கோடையில் நரைத்த
நினைவுகளிலிருந்து ஒரு மொட்டை
அது மலரும் மட்டும்
உற்று நோக்கி
கர்ப்பவாசக் கண்கள்போல
உறங்கிவிடுவது
இப்படித்தான் பிறக்கும்போதே
பிரபஞ்சத்தினூடான பிரிவும் நேர்கிறது[/one_half]
[one_half_last][/one_half_last]