[one_half]சில கடல் மைல்கள்
தேயிலைச் சாறுவடியும் மலைகள்
பாறைகள் புரண்டெழுந்தமொழி
யார் அதைப் பாடினார்கள்
யார் அதைக் குழிகளில் இட்டுப் புதைத்தார்கள்
அவர்களே பேசட்டும்
நீதிகளின் தாரதம்மியத்தை
உயிர்பறித்த நாடகத்தை
அவர்களே சொல்லட்டும்
உறுப்பிழந்தவர்களில் குழந்தைகளை
நீதி ஒரு டாங்கியின் வாய் போன்று இருக்கிறது
அதன் எச்சில்பட்ட அடமெல்லாம் இரத்தம்
மீண்டும் ஒரு வாய்ப்பு
மீதம் இருப்போர் கைகளைத் தூக்குங்கள்
வாழ்வது ஒருமுறை
வீழ்வது யாராய் இருந்தால் என்ன
தேயிலை இரத்தத்தை உரமாக்கிக் கொண்டது.[/one_half]
[one_half_last][/one_half_last]