[one_half]
தவிக்கும் தருணம்
யார் சொல்வது
எதுவும் காதில் விழவில்லை
எதிரே ஏன் அமர்ந்திருக்கிறாய்
என்பதில் அவ்வளவு முக்கியமா
வேறொரு கணம்
வினாடிக்கும் குறைவான நேரத்தில்
வேகமாக அது கடந்து விட்டது
தவிப்பது யார்
விரைந்து சென்று
படகைப் பிடிக்கவேண்டும்
ஆளற்ற படகு
போய்க்கொண்டிருக்கிறது
போய்க்கொண்டிருக்கிறது
போய்க்கொண்டிருக்கிறது
என் ஆடைகளுடன்.
[/one_half]
[one_half_last][/one_half_last]