[one_half]அசையும் மரங்களிலிருந்து
உன் சன்னலுக்கு ஒரு துரோகப்பாடலை
அனுப்பி வைத்தேன்
அதன் ஒரு வரியை மலராக்கி
எனக்கு வாழ்த்துக்களை அனுப்பியிருந்தாய்
விடையெறுவதும் சந்திப்பதும்
வாழ்த்துக்களைப் பரிமாறத்தான்
என்ற சம்பிரதாயம்
மிச்சமான வரிகளுக்குள்
தேம்பிக்கொண்டிருப்பதை மறைக்கிறாய்
துரோகத்தில் என்ன இடவலம்
சந்திப்புக்களில் என்ன
குறுக்கு வெட்டுத் தோற்றம்
யார் நுட்பமானவர்கள்
நழுவுவதற்கு வார்த்தையில்தான்
எவ்வளவு இடைவேளி
உனக்குப்பதில் ஒரு புறாவைக்
காதலித்திருக்கலாம்
துரோகம் என்றே வைத்துக் கொள்
நீகூட இரு மண்ணாந்தையைக் கொஞ்சலாம்[/one_half]
[one_half_last][/one_half_last]