[one_half]ஆளுக்கொரு சொல் வைத்திருக்கும் உலகம்
ஒவ்வொரு சொல்லும் ஒரு உடல்
எனது சொல்லை எடுத்துக்கொண்டு போனவன்
சொன்னது அவனது சொல்லை
கேட்டவன் தனது சொல்லை
எனக்கு அனுப்பி வைத்தான்
அந்தச்சொல் ஒரு குப்பைக் கூடையில் வெளியேறுகிறது
கொண்டு போனவன் சொல்லை
குறிப்புகளில் பத்திரப்படுத்தினேன்
எப்படித் தேடினாலும் கிடைக்காது
எனது சொல்
என்பதுதான் தற்போதைய நிம்மதி[/one_half]
[one_half_last][/one_half_last]