[one_half]
எனது வீடுகள் நடமாடிக்கொண்டிருக்கின்றன
அதன் முகவரியை ஒரு குன்றினைப் போல்
என்னால் பிடித்துவைக்க முடியவில்லை
நகர்ந்துகொண்டிருக்கும் என் வீட்டினை
ஒரு பேருந்து ஓட்டுநர்
உங்களுக்குக் கைகாட்டும்படி நேரலாம்
நான் உங்களிடம் கொடுத்த
அதன் வரைபடம் தற்காலிகமானது
அதன் முகவரி
தற்காலிகத்தின் நட்புவெளிகளில்
அதன் முகவரி அட்டையை அவர் ஏன்
பெற்றுக் கொள்கிறார்
வரும் நாளில் நகர்ந்து போய்விடும்
என் வீட்டின் முன்பு அவர் என்ன செய்வார்
ஆனாலும் என் முகவரியை
உங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய
கடமை எனக்கிருக்கிறது
ஒரு நகரத்தின் மையத்தில்
கண்டுபிடித்துவிட முடியும்
என அறிந்திருக்கும் உங்களுக்கு
அதன் தற்காலிகத் தன்மையும்
தெரிந்துதான் இருக்கும்
எப்படி நகர்ந்தாலும் ஏதேனும் ஒன்று
மையத்தில் நிற்க்கும்போது நிகழ்வதுதானே
தற்காலிகமாகிறது
[/one_half]
[one_half_last][/one_half_last]