[one_half]பரிமாறப்பட்ட மது
நிறமிழந்து கொண்டிருக்கின்றது
ஒரே நேரத்தில்
அலை புரள்கின்றன சிந்தனைகள்
தொலைபேசி உரையாடல் தொடர்கிறது
நிகழ்கணமும் வாய்ப்பும்
தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா
தகுதிகளைத் தீர்மானிக்கும் முன்
நீர்த்துக்கொண்டிருக்கும் திரவத்தை
தீர்த்துவிடுவதே பயனுள்ள செயல்
எது வேண்டுமானாலும் நிகழலாம்
அதற்குமுன் ஒருவேளை
ஆழ்மனம் புதுப்பித்துக் கொண்டுவிட்டால்
நிகழ்கணமும் வாய்ப்பும் தொட்டுக்கொண்டால்
மீதமான திரவத்தில்
அலை புரளும் கடலை விட்டு
நாம் மேலேறலாம்.[/one_half]
[one_half_last][/one_half_last]