[one_half]யுவதிகளை விரட்டும் வண்ணத்துப் பூச்சிகள்
வன்முறை நிறைந்தவை
மெல்லிய நூல் போன்ற கத்தியை
அவர்களின் கண்களில் செருகி
தேனெடுக்கும்போதுதான் கவனித்தேன்
மலர்களை மயக்கும் அதன் குரோதத்தை
ஆயினும் யுவதிகள்
வண்ணத்துப் பூச்சியை நேசிக்கிறார்கள்
தங்களது இமைகள்
அதன் சிறகுகளைப் போன்றே
படபடப்பு மிக்கவை என நம்புகிறார்கள்
வண்ணத்திகள் மொய்க்கும்
தங்கள் உடல்களை நீராட்டி
சிதறும் துளிகளை அதற்கு
உணவாக வைக்கிறார்கள்
இரவில் வௌவால்களாக மாறிவிடும்
அப்பூச்சிகளைப் பற்றி
என் தோழி ஒருத்தியிடம் எச்சரித்தேன்
அதன் சிறிய கத்தியையும்
இரத்த வெறியையும் நம்பகப்படித்தினேன்
அவள் மறுத்து
வண்ணத்திகள் ஒரு நோய்க்கான
மருந்து மற்றும் பணிவிடைகளையே
தங்களுக்கு
செய்வதாகவும் இரவில் தாங்களே
அவற்றை வௌவால்களாக
மற்றிக்கொள்வதாகவும்
புன்னகைக்கிறாள்[/one_half]
[one_half_last][/one_half_last]