[one_half]அத்துவான வெளியில்
குடியிருக்குமென்னை
என்ன செய்துவிடப் போகிறது
உன் உச்சமும் நீச்சமும்
வினோதங்களை விளைவிக்கக்கூடிய
விதையைத்
தேடியலைந்தேன்
நிபந்தனைகளுக்குட்பட்டு
பேரத்தைத் துவக்கினோம்
உவர் நிலமாயினும் பரவாயில்லை
நன்னீர் ஊற்றச் சொன்னாய்
விளைவு உடனே தெரியாதென்றாய்
காற்று சற்றுத் தாராளமாய் இருக்கட்டுமென்றாய்
கண் விழித்துப்பார்க்கக்
கூடாதென்றும் கட்டளையிட்டாய்
விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்
விளைவிக்க வேண்டிய
ஆயத்தங்களோடு புறப்பட்டு
விளைநிலமே
உனதானதறிந்தபின்
விளைவிக்க இடந்தேடி
வினோதங்களை விளைவிக்கும் விதையை
விற்பனை செய்யப் புறப்பட்டேன்
எதுவுமறியாமல்
கூடவே வந்துகொண்டிருக்கிறது
இமை விளிம்பில்
துக்கத்துக்கு ஏங்குமென்
ஒற்றை முடி[/one_half]
[one_half_last][/one_half_last]