[one_half]ஈராயிரம் வயதொன்றில்
என்னைத் தேர்ந்துகொள்
வளைந்து முதிர்ந்த கிழட்டுக்கையொன்றில்
உன்னைப் பற்றுவேன்
ஆயினும் முகமோ
பால்பற்கள் முளைத்த குழந்தை
என் அடிவாரத்தில் சளசளத்துப் போகும்
நீரோடை உனது பருவம்
உன் கேசங்களைப் பற்றி மேலேறும்
வேர்களில் எனது நட்சத்திரங்க்களை
பொருத்துகிறேன்
பாம்புகளைப் போல அதன் கண்கள்
ஒளிர்கின்றன
மேய்ப்பன் ஆடுகளை ஓட்டிப் போகிற
பூமியின் மீது கண்விழிக்கிறேன்
அப்போதைய வயது உன் கர்ப்பத்திற்கும்
பிறகு ஒரு தடவை என் மீதான காதலுக்கும் ஆனது
எந்த வயதில் நீ அதைத் தேர்ந்தாய்
காலத்தில் ஒன்றும் தீரவில்லை
குழந்தைக்கு ஈராயிரமும் காலமில்லை.
[/one_half][one_half_last][/one_half_last]