[one_half]
இரவுகளை வாங்கிப் போகிறவனுக்கு
கண்சிவக்கும் பகல்களை கடனாகக் கொடுத்தேன்
கோவில் மணியோசையைச் சாட்சியாக வைத்து
அந்தி வரும்போது இல்லையெனில்
வெளிநடை சாத்துமுன் தந்து விடுவதாக
வாக்குறுதி அளித்துப் போனான்
பிறகு அவன் பகலில்லா தேசத்தில்
பரதேசியாய்ப் போய்ச் சேர்ந்து கொண்டான்
எனத் தகவல் வந்தது
வந்தவன் பகவான் என்று பட்டவர்த்தனமாகத் தெரிய
சனிக்கு ஒன்பது குடம் நீர் விட்டேன்
சாக்குப் போக்குச் சொல்லாமல்
கருடன் வானில் பறந்த நாளில்
ஆலமர் செல்வனுக்கு ஒரு அர்ப்பணம்
சம்சாரிகளுக்கு சமபந்தி உபச்சாரம்
ஜென்மத்தில் அமர்ந்து விட்டபடியில்
சேர்ந்தாலும் சேரும்
சொல்லாமலும் போகும்
என்றபடி பிறிதொருநாள்
அந்தப் பரதேசி கண்ணில் பட்டான்
இந்தமுறை அவன் கண் சிவந்திருந்தது
பகலில்லா தேசத்தில் உன் இருள் வாங்க
யருமில்லா “இந்தா இப்பொழுது பகலைப்பிடி”
என்று அதை வில்வத்தில் கட்டிவைத்தப் பின்புதான்
என் வீட்டினுள் நுழைந்து
அதுதான் வெளிச்சத்தை நிரப்பியது[/one_half][one_half_last][/one_half_last]