[one_half]எனது சன்னல்கள் தட்டப்படுகின்றன
கதவுகள் திறந்திருக்கும் போதும்
வாசலில் வரவேற்க நான் நின்றிருந்தாலும்
எனது சன்னல்கள் ஏனோ
பெருஞ் சத்தத்துடன் தட்டப்படுகின்றன
சன்னலைத் தட்டுபவர்கள் பற்றி
என்ன சொல்வது
பல நேரம் ரகசியமான மெல்லிய ஓசைகள்
திடீரென அதிகாரத்துடன் பலமான தட்டல்கள்
நாசூக்காய் அழைக்கும் பரிச்சயமான தட்டல்கள்
ஏக்கம் நிறைந்த சுண்டிவிடும் ஒலிகள்
துப்பறியும் பொருட்டான பெருமூச்சுகள்
சத்தம் மட்டும் தாளவில்லை
எல்லாச் சன்னல்களையும் திறந்துவைத்தால்
யாருமில்லாத வீடெனத் தெரிந்துவிடும்
என்றாலும்
தற்சமயம்
ஒரு சன்னலைத் திறக்கின்றேன்
மற்றொன்றை மூடுகிறேன்[/one_half]
[one_half_last][/one_half_last]