[one_half]வெளியும் காலமும் அதிர
நீருக்குவெளியே துள்ளியது மீன்
நாயை அழைத்துச் சென்றவன்
பனியில் உறைந்து தூங்கும் மீங்களை வியக்கிறான்
ஈர்ப்பு விசை இழந்து மிதப்பதாக
கனவு காண்பது
பிடிமானமற்று ஆழத்தில் வீழ்க்காண்பது
பாறையிலிருந்து வேறொரு பாறைக்கும்
ஒரு காலிலிருந்து மறுகாலுக்கும்
இடையே
நிலம் கொஞ்சம் அசைந்துவிட்டது
கரையில் கிடக்கும் உடல்
காற்று விளையாடும் துவாரம்
துள்ளிய மீன் அந்தரத்தில் வாழ்கிறது[/one_half]
[one_half_last][/one_half_last]