[one_half]மயானச் சொல் எடுத்து
நீர் நிலைகளில் கலக்கும்போது
சிறு மீன்களின் கவிதை முணுமுணுக்கிறது
அப்பா
பாழ் நிழங்களில் கைவிதை கொடுத்து விட்டு
கண்கலங்கிப் போய்விட்டாய்
நான் விதைத்து அறுக்க கடல் மட்டும்தான்
கண்ணில் தெரிகிறது
கடந்துபோன எல்லா அறுவடை தாபங்களையும்
உள்ளங்கையில் வைத்து கசக்குகிறேன்
பருத்ததில் இரண்டும் பதரில் நூறுமாய்
வளியில் பறக்கின்றன
கல்லால மரத்தினடியில்
முகம் புதைத்து இறந்தவனோடு
ஒருமுறை அறிவின் பிரக்ஞை இழந்து
நான் மதுவருந்த வேண்டும்
அப்போதேனும் என் மீது
பித்ருக்கள் எச்சமிடாதிருக்கட்டும்.[/one_half]
[one_half_last][/one_half_last]