[one_half]எனது நடைவண்டி
நான்கு சக்கர வாகனமாக மாறிய காலத்தில்
உன்னோடு எனது முதல் பிணக்கு ஏற்பட்டது
அன்றுதான் என்னிடம் சொல்லாமல் செல்லும்
முடிவையும் நீ எடுத்திருக்க வேண்டும்
நான் உனக்கான ஆடைகளை அளவிட்டு
வாங்கிக் கொண்டிருக்கும்போது
உனது புனித யாத்திரை கண்காணா
தேசத்தைக் கடந்துகொண்டிருக்கும்
பிறகும் நீ விருப்பியது
அந்திமக்கால இறைமை மட்டுமா
உன் பயணத்தில் நீ எடுத்துச் சென்றது
யாருடைய பிஞ்சு விரல்கள்
உருவத்தின் அமைதியின்மையை
உனது உபதேசங்க்களாக
அதை நான் என் வாழ்வின்
விரைவுப் பகுதி என்பேன்
நீ ஒரு சொல்லைப்போல
என்னை விட்டுச் சென்றிருக்கிறாய்
அதன் அர்த்தத்தை
நான் பேரகராதி முழுக்கத் தேடுகிறேன்
இருப்பினும் உனது கைகள் அகல் விளக்காய்
என்னை ஏந்துகின்றன
நான் உனது நடைவண்டிதானே
நான்கு சக்கரங்களும் உன் உபதேசத்தின் வேகம்.
[/one_half]
[one_half_last][/one_half_last]