[one_half]மகிழ்வும் துயரமுமென
பரமபத விளையாட்டா உன் சகவாசம்
மறைவிடத்தில் தீட்டப்பட்ட
கத்திபோல பளபளக்கிறது உனது வார்த்தைகள்
கணங்களை தவறவிடும்போது
பால்யகால வாசனையில்
நமக்கிடையே ஒரு தைல மரம்
அல்லது ஊர்த் திருவிழா
முடியாதுதானே
அனுபதிக்கு வெளியே அலைய
உன் தேர்வும்
சாத்தியத்திற்கு உட்பட்ட எனது அவசரமும்
சொல்லச் செல்ல
எறும்புகள் புற்றுக்குள் நுழைகின்றன
ஏழு பிறவியில் நாம் எத்தனையாவது
பிறவியென்று தெரியத்தான் வேண்டும்
அதற்குமுன்
உன் துயரத்திலிருந்தும் மகிழ்விலிருந்தும்
இப் பிறவியை நான் இரகசியமாக்குவேன்.[/one_half]
[one_half_last][/one_half_last]