[one_half]
பசும் புற்களின் இடையில் கல்
நீரின் மேல் நிலவு
உப்பிற்கிடையே ஒரு விதை
அன்பிற்கிடையே ஒரு துரோகம்
பாதை மாறிச் சென்றிருக்கிறேன்
திரும்புவதற்கு மாமாங்கம் ஆகலாம்
சென்ற பாதையில் சேர்வதற்கோ
யுகங்கள் பிடிக்கலாம்
இப்போது
காலத்தின் இடையே நான்
உருவத்தின் மேல் ஒரு தற்செயல்
சொல்லுக்கிடையே ஓர் அரூபம்
மழைத்துளிக்கு இடையே ஒரு கல்த்துளி.
[/one_half]
[one_half_last][/one_half_last]