[one_half]
ஆட்டுக் குட்டிகளை மேய்க்கும்
சின்னஞ்சிறுவனோருவனை
கண்டதும்தான் ஆசுவாசமாயிற்று
எதிரே கண்ட இருவழிப் பாதையில்
எதில் சொல்வதெனக் கேட்டபோது
ஒரு பாதை தடங்கலானதால்
மறு பாதையில் போகலாமென்றான்
ஒரு எச்சரிக்கைப் பலகை தேவையெனப்பட்டது
என்றாலும் ஆடுகள்
அதில் நுழைந்துவிடுவது இயல்பானது என்றவன்
அந்தப் பாதையைப் புற்களும் தளிர்களும்
மூடிக்கொண்டுவிட்டதாகச் சொன்னான்
தார்ச் சாலையில் நகர்கிறது எனது வாகனம்
கதவில் ஆடுகள் உரசும் சத்தம்
சக்கரங்களுக்கடியில் தாவரச்சாறு கசியும் மணம்
[/one_half]
[one_half_last][/one_half_last]