[one_half]சன்னல் வழியே
என்னறைக்குள் எப்போதும் கடல் காற்று
கரை மணலெங்கும் சிற்றெறும்புகளாய்
மக்கள் ஊரும் மாலை நெய்தல்
எதிரே செயற்கை ஊற்றென வழியும்
ஒரு குன்றிலிருந்து வேடிக்கைச் சாரல் காற்று
எழில்மிகு அலுவலகத்தின் நான்காம் தளத்தில்
ஏதிலி போல் இடம் விட்டு நான்
இங்குற்ற காலம் எம்டன்கள் குண்டு போட்ட காலம்
ஏதோ விதியென்றெண்ணி
என் மதியம் உண்பகல் இருக்கையில்
ஊழியச் சோர்வு முகம் நெருக்க
அரை உறக்கத்தில் கால் நீட்டியிருப்பேன் போல
அதை திடுக்கென கடலில் நழுவ
விட்டு விட்டதாய் விழித்தெழுந்தேன்
ஆகாசம் மழை பொழிந்தவாறிருக்க
ஆழ்கடலில்
தரை தட்டி நின்றிருந்த கப்பல் ஒன்று
புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தது [/one_half]
[one_half_last][/one_half_last]