[one_half]
பயனற்ற பொருளை
விற்றுப்போகும் தெருவில்
வீட்டிற்குள் வந்த வண்ணத்துப் பூச்சியை
அதிசயித்தபடி வெளியே வந்தேன்
நீதான் போய்க் கொண்டிருந்தாய்
அதிர்வின் வலியறிந்து
உனக்கான அழைப்பெண்ணைத் தீண்டினேன்
தேன் சிட்டுகள் சில மயங்கி விழுந்ததற்காக
வீட்டுத் தோட்டத்தில்
காகங்கள் அலறிக் கரைகின்றன
நீ மறுபடியும் கடக்கப்போகும் தெருவில்
என்னைப் பெயர்சொல்லி அழைத்து நிற்பாயா
விடுதலைக்குப் பொருள் உரைக்கும்
உன் மொழியிலிருந்து
ஒரே ஒரு சொல்
தேன் சிட்டுகளின் வாயுலரும் முன்பு
உன் முத்தம்போல அது
நிகழ்ந்துவிட வேண்டும்.
[/one_half][one_half_last][/one_half_last]