[one_half]பயந்தவர்கள் சொல்கிறார்கள்
நெருப்பு வாகனத்தில் கடவுள்
தம்மை விரட்டி வருவதாக
இன்னும் சிலர்
விடிந்து துரத்தும் பதற்றம்
தணிக்க முடியவில்லை யென
மேலும் எலிகள் நாய்கள்
பெருத்துவிட்டதென அஞ்சுகிறார்கள்
பேசுபவர்களைக் கண்டால்
அச்சம்
மௌனிகளின் கண்கள்
எப்போதும் குற்ற உணர்ச்சிக் குள்ளாக்குவதாக
பீதியடைகிறார்கள்
காலத்தை நன்றாகப் பிரித்து
பதிமூன்றால் வகுப்பதுதான்
சிறந்த வழி
விடை தேடாமல் இருந்தால்
பயம் கூடாது.[/one_half]
[one_half_last][/one_half_last]