[one_half]பாதங்களின் கதை
சில காதங்களும்
சிற்றின்பத்தின் தாபங்களும் எனில்
யாரோ சொல்லிவிட்டுப்போன
கதையில் நான் ஒரு மோகத்தின் நிழல்
உனக்கதை ஒரு வேடனாய்ச் சொல்லவா
விடுகதையாய் நிறுத்தவா
பூமியில் உன் வகி பாகம்
என்னைச் சரிபாதியாய்த் தேர்ந்தெடுக்கும்
ஆயினும் உனது கண்ணீர்
ஒரு ஓலைச்சுவடி
அது பாடியது ஆயிரம்
பட்டு உதிர்ந்ததோ ஒருகோடி
நேரங்கள் கழியும் வாழ்க்கை
நிஜமும் பொய்யும் தின்றது மிச்சம்
ஆயினும் தோழி
காதலெனில் உனது பெயர்
கதைகள் எனில் எனது போதம்
பேரின்பம் மட்டும் உனக்கும்
எனக்கும் ஒருமுறைதான்.[/one_half]
[one_half_last][/one_half_last]