[one_half]பரிமளாவின் ஊருக்குச் செல்வது
குளத்து மீன்களின் வாசம் நிரம்பியது
ஆடுமாடுகளின் சாண வீச்சம்
ஓடைக்கரை தாண்டினால் திராட்சைத் தோட்டம்
பரிமளாவின் நடமாட்டமே வாசனைமிக்கது
சிறு வயது திருவிழாக்களில்
பறிற்றங்க் காய்களை பச்சையாகத் தின்னும்
பரிமளா பிறந்த கன்றுக்குட்டிபோல இருப்பாள்
வெள்ளாடுகள் விற்ற பணத்தில்
பரிமளாவிற்குக் கல்யாணம்
கணவன் நகரத்தில் கரும்பு வியாபாரி
எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த காலத்தில்
என்னை மூன்று முறை நீரில் முக்கி எடுத்தாள்
கடனில் மூழ்கிய கணவன்
திரும்ப மேலெழவே இல்லை
சில பத்தாண்டுகள் கழித்து
பரிமளாவின் ஊருக்குப் போனேன்
என் காதோர நரையை விடுங்கள்
ஆச்சரியமான அதிசயம் நம்பமாட்டீர்கள்
அதே வயது பரிமளா
நான் அழைக்க அழைக்க
ஓடிக்கொண்டிருக்கிறாள்.[/one_half]
[one_half_last][/one_half_last]