[one_half]நமது கிராமம்
சிறிய கல்தெய்வத்தால் விரிந்து
அறுவடையிலிருந்து ஒரு நெல்
தென்னையிலிருந்து ஒரு நெற்று
வாழையிலிருந்து ஒரு களை
வரப்புகளில்
வீட்டுப் பறவையின் இரத்தம்
குடிகளுக்கு மேளத்துடன் ஒரு வெறியாட்டு
இரவுக் கொடை நிலத்தில்
திறந்தவெளிப் புணர்ச்சி
மழைபெய்கிறது மாரி மனம் குளிர்கிறாள்
கூலியாள் விதையை நனைக்கிறான்.[/one_half][one_half_last][/one_half_last]