[one_half]மரங்கள் அதிக ஆயுளுடயவையாக
இருந்து வருகின்றன
மனித வரலாறு அதினினும் அதிகம்
காடுகள் குறை பட்டு கொள்கின்றன
வயல்வெளி எத்தனை
அழுத்தங்களை பெறுகிறது
காற்று உடுருவும் கானகங்களின் ஓசை
தாமரைகள் பூக்கும் தடாகங்கள்
மந்த மாருதம் வீசும் இளவேனில்
நிலத்திற்கு வெளியே எதுவும்
குதிப்பதில்லை
ஒரு மரம்
அதில் ஏழு துளிகள் விழுந்து கனியாகும்
காடுகள் படர்ந்து வர
காலடியை விலக்கு
ஒரு கொடியெனும்
உன்னை பற்றிப் படரட்டும்.[/one_half]
[one_half_last][/one_half_last]