[one_half]சொல்லப்பட்டிருக்கிறது
எண்ணற்ற சொற்களால்
ஓர் அறிவுரை
செயல்பட்டிருக்கிறது
சூட்சமத்தின் வழிமுறைகள்
விளைந்திருக்கிறது
பாவமும் வினையும்
முடிந்திருக்கின்றன
தலைமுறைகளும் சில விலங்குகளும்
கேட்கப்பட்டனவா
ஒரு யுகத்தின் தடம் மாறிப்போன தவறுகள்
வழங்கப்பட்டதா
கண்ணீருக்கு பதில் எளிய நம்பிக்கைகள்
உறுதி செய்யப்பட்டனவா
அறிவின் சாரங்கள்
தொடங்கியிருக்ககூடும்
மனப்பித்தின் கோமாளிக் கூத்து
எதுவும் தெரியவில்லை
என்று சொல்வதுதான் எத்தனை
தித்திப்பனது.[/one_half]
[one_half_last][/one_half_last]