[one_half]தெற்கு வாடைக்காற்று வீசும்
இல்லத்தின் பின்புறம்
மூலிகை மணக்கும் காடு
காதலை அதன் அருவிகள் சலசலக்க
அதன் மலர்கள் மெய்மையை ஒளிர்விக்கும்போது
எனது இளமையின் வருட வளையங்களை
உன்னிடம் பகிர்ந்துகொண்டேன்
உனது சச்சரவுகளை ஆட்கொல்லி விலங்குகளிடமும்
உனது அன்பைக் காட்டுக் கொடிகளிடமும்
நான் சொல்லிக் கொண்டலைவது
அவ்வினங்களில் பொழியும் பருவகால
மழைத்துளிகள் அறியாதது
எனது இல்லத்துள் உன்வருகை
நேர்ந்தபோது அதன் பலகணியில் நின்று உனக்கு
அம் மலையைக் காட்டினேன்
அதன் வருட வளையங்களையும்
வாடைக் காற்றையும் சமன்குலைக்கும்படி
எனையிழுத்து
முத்தமிட்டாய்
மிருக வெப்பமும்
தாவர வாசனையும் தகித்தது[/one_half]
[one_half_last][/one_half_last]