[one_half]
வெயிலை எனக்கு நீண்டகாலமாய்த் தெரியும்
நண்பகலில் நடக்கும் காந்தி
மரனிழலில் துயிலும் நாய்கள்
தீக்கொன்றை மலர்கள் உதிர்ந்த சாலைகளில்
நடந்து செல்லும் பள்ளிக்குழந்தைகள்
இப்போதும் காணலாம் மதியத்தில்
அலுவலக கால உச்சிப் பொழுதை
பகல் உணவிற்குப் பின்பான கோப்புகளை
பார்வையிடுகையில்
பார்வையாளர்கள் விருந்தினர்கள் என
எவரும் வருவதில்லை
எவ்வித முடிவுகளையும் எடுக்கவியலாதபடிக்கு
தடுமாறச் செய்யும்
இந்த நண்பகல் அச்சுறுத்துகிறது
வெயில் அகன்ற நள்ளிரவின் உறக்கத்தில்
அல்லது
குளிர்ந்த காலையில்
எவரும் முடிவுகளை எடுப்பதில்லை
முடிவுகளை உறுதிசெய்யும்
நண்பகல்
நம்முன் வந்து நிற்கையில்
அதிலிருந்து
தீக்கொன்றை மலர்கள்
மணம் வீசுகின்றன முடிவற்று.
[/one_half]
[one_half_last][/one_half_last]