[one_half]யாரோடும் உறவென்று சொல்ல
நல்லதொரு சொல் வேண்டும்
பங்கமற்ற மறுதலிப்பு இல்லாத
வஞ்சகம் வன்மம் துரோகம் களைந்த
மென்மையான கைப்பற்றல் போல
வலியின் போது அச்சமற்ற புன்னகைக்கு
தோதாய்
பழங்கடவுள் மறைத்து வைத்திருந்தால்
அல்லது நாலும் தெரிந்த ஒருவன்
உச்சரிக்காமலேயே புதைத்து விட்ட ஒரு சொல்
அது என் வழிச் செலவிற்கு
மழைமேகம் கனிவதற்கு
அனாதையாக்கப்பட்ட தெருவிலங்குகள்
பசியாறுவதற்கு பிறகும்
நாள்பட்ட நோயொன்றை குணப்படுத்தவும்
ஒரு சொல்
அவ்வளவு அர்த்தங்களால் சுமையேறாத
ஒரே ஒரு சொல்.
[/one_half][one_half_last][/one_half_last]