[one_half]
இரண்டாகக் கிழிந்த காலத்தின்
ஒரு பக்கம் உன் கண் துடைப்பு
மறு பக்கம் நான் தொடர்ந்தோடும் விதி
வாதம் அனைத்திற்கும் ஒரு சோற்றுருண்டை
இதில் வரலாறு என எதைச் சொல்லுவது
கோலம் பன்னிரெண்டானாலும்
விழும் பகடைதான் விழுகிறது
சொல்லிப் போனாய்
இப்பொழுது
சொல்லாமல் போய் விடுகிறாய்
இழுத்த கோட்டின் முனையில்
நீ இருப்பதாய் நூலைப் பிடித்திருக்கிறேன்
சொல்லால் கடந்த காலம் மறுபடியும்
வந்தாலும் வரும் என்றே
காலத்தை மூன்றகக் கிழிக்கிறேன்
நடுப்பக்கத்தில் எட்டிப் பார்க்கும்போது
உன்முறையில் நானும் என்முறையில் நீயும்
தென்படவில்லை
அந்தப்பக்கம்
நீயும் ஒரு காலம் கிழித்திருப்பாய் போலும்
[/one_half]
[one_half_last] [/one_half_last]