[one_half]
நீலமலர் என்றால் நீலமலர்தான்
நீலம் ஒரு ஆன்றவிழ்ந்தடங்கிய நிறம்
நீலம் பாரித்துவிட்டது என்பார்கள்
நீலமேகம் நீல வண்ணக்கண்ணன்
நீலாம்பரி ராகம் நீலக்கடல்
உன் நீலம் முயங்கும் கண்களில்
பரம்பொருள் தேடும்
என்பிறவி ஒரு நிறக்குருடு
என்பாதை உன் அன்பின் கைக்கோல்
வாழ்வு வட்டம் என்பார்கள்
சந்திக்காமல் தூரமாகவும் விலகிப்
போகவும் முடியாது
இந்த டிசம்பரில் நீலமலர்கள் பூத்துவிட்டன
இந்தப் பருவத்தில் இன்னன்ன நடக்க வேண்டும்
என்பதாய் இருக்கிறது வட்டம்
அது தப்பும் முன்
ஒரு நீல நாளை உன் அமைதியுடன்
வேண்டுகிறேன் சகியே.
[/one_half]
[one_half_last] [/one_half_last]