[one_half]கடந்து சென்ற
விரோதி வருடங்களுக்குத் திரும்பினேன்
அது
இதுவரை அறுபத்தி நான்கு முறைகள்
அந்நிலத்தைக் கடந்திருக்கிறது
மனைவியிடமிருந்து இலைகளையும்
வயல்களிடமிருந்து பறவைகளையும்
அது விரோதமாக்கியதாக வரலாறு படர்ந்தது
இந்த விரோதி ஆண்டில்
எல்லா நண்பர்களையும் பகைத்தேன்
எல்லா விரோதிகளையும் நண்பர்களாக்கி முடித்தேன்
ஒருமுறை இது வாய்க்குமென
நீதிநூல் ஒன்றில் அறிந்தேன்
தனக்குப் பகைவர்களே இல்லையெனச் சொன்ன
தலைமுறையின் கடைசி வாரிசு
அவன் பிள்ளைக்கு
பிரசித்திபெற்ற பள்ளியில்
இடங்கேட்டு
என்னிடம் வந்து நின்றான்
ஆதிசிவன் என என்னை
வணங்கியபோது
நண்பர்கள் பகைவர்களானது பற்றி
ஏதும் சொல்லாமல் சிபாரிசு செய்தேன்
விரோதி இம்முறை
என் வாய்ப்பைத் தவறவிடவில்லை[/one_half]
[one_half_last][/one_half_last]