[one_half]கைக்கெட்டும் தூரம்தான் சகோதரா
கண்ணீருடன் காலம் நழுவிக் கொண்டிருக்கிறது
பகலிரவென பழக்கமாகிவிட்ட
நிலத்திலிருந்து
முன் நீ கடல் தாண்டிய வரலாற்றை
எம் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கவில்லை
நீ உழைத்து விளைவித்தாய் ஒரு தீவை
நீதியே அதை நீ
மொழியால் ஆராய வேண்டும்
சுற்றம் கூடி அழும் பிணக்காட்டிலிருந்து
உயிர் பிழைக்க ஏதிலியாய்
உலகமெலாம் ஓடிப்பரவும் கதை கேட்ட
நாள்முதல் பதற்றம் கூடுகிறது
வெறும் செய்தி அல்ல இது
வாழ்ந்த கலைச் செல்வங்களின் அழிவு
காதலும் ஆர்த்த ஆன்மீகமும்
பூமிக்கு வழங்கிய புண்ணிய வழக்காறு
ஏனிவர் வாழ்வு இப்படி
எவரெவருக்கோ கடத்தப்பட்டது
கைக்கெட்டும் தூரம்தான் சகோதரா
கடல் தாண்டிப் பிழைக்கப் போனாய்
கைக்கெட்டும் தூரம்தான் சகோதரா
உன் கதறல்களின் மேல் மலர் விழுகிறது
கடல் நிறைய செவி அதிர
பதற்றம் கூடிக்கொண்டே இருக்கிறது.[/one_half]
[one_half_last][/one_half_last]