[one_half]பத்து வயதுக் கனவில் வந்த
பள்ளி மைதானம்
வாலிபத்தில் ஒரு நீர்நிலையானது
கனவில் பிடித்த மீங்களை
கரையில் கிடத்தி எண்ணினேன்
துள்ளிய கனவு ஒன்று
நீருக்குள் மறைய
புத்தகப் பையுடன் வீடு திரும்பினேன்
நீர்நிலைகள் மைதானமாகும் கனவு
என் முதுமையின்
புத்தகப்பையில்
எப்படி இவ்வளவு மீன்கள்[/one_half]
[one_half_last][/one_half_last]