[one_half]தற்காலிகத்தை உனது தட்டிலும்
நிரந்தரத்தை எனது பள்ளத்தாக்கிலும்
நிரப்பும் காலத்தின்
நிகழ்கணங்களில் ஒன்றுதான்
நமது வன்முறையும் காதலுமாய்
காட்சிக்கு வருகிறது
உனக்கு உடை மாற்றும்போது
எனது தட்டு நிரந்தரமற்று நகர்கிறது
இந்நேரம் மரங்கள் கனிகளைத் தந்துவிடுகின்றன
பழுத்த இலைகள் விழ
உனது முத்தத்தின் ஈரம்கூட உலர்ந்துவிடுகிறது
அன்பே எவரின் நிரந்தரத்தை நாம் பிரதிபலித்தோம்
எந்தத் தற்காலிகத்தில் இவையெல்லாம் நிகழ்ந்தது
காலம் தன் வெறுமையை
நம்மில் நிறைந்தது[/one_half]
[one_half_last][/one_half_last]