[one_half]நீர்மையுடன் ஒரு பெயரெழுதி உச்சரித்தேன்
எதிரே நீர் சலனத்தில் ஒரு உருவம் தோன்றி மறைந்தது
நெருப்பெழுதி ஒருமுறை ஊதிக் கலைச் செய்தேன்
தீயுருவில் ஒரு தெய்வம் என்னைத் தீண்டிச் சென்றது
காற்றில் வரைந்து ஒரு எழுத்தைக் கைவிட்டேன்
கடும்புயலாய்ச் சீறி ஒரு கதவைத் திறந்து வைத்து
நிலமெங்கும் வார்த்தையொன்றை வரைந்து வைத்தேன்
நெடுமரமாய் வளர்ந்தெழுந்து எனக்கு நிழலாய் ஆனது
ஆகயத்தில் ஒரு முறை வீசியெறிந்தேன் என் ஆதி எழுத்தை
இப்போது அங்குமிங்கும் தாவிச் செல்கிறது ஒரு பட்டாம்பூச்சி
அதன் சிறகசைப்பில்
உறைபனி உருகியோட இயங்குகிறது ஒரு
படகோட்டிக்கான
நதிமூலம் . . .[/one_half]
[one_half_last] [/one_half_last]